போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது


போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 21 March 2022 11:47 PM IST (Updated: 21 March 2022 11:47 PM IST)
t-max-icont-min-icon

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்

சீர்காழி:
 சீர்காழி அருகே தைக்கால் கிராமம் மதகடி தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் மணிமாறன் (வயது 31). இவர் தனக்கு சிலர் கொலை மிரட்டல் விடுத்ததாக சீர்காழி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜூனன், தைக்கால் மதகடி தெருவை சேர்ந்த கலியபெருமாள் மகன் செந்தில் (34) என்பவரை செல்போனில் தொடர்பு கொண்டு விசாரணைக்கு வருமாறு தெரிவித்துள்ளார். அப்போது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜூனனை செந்தில் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொடுத்த புகாரின்  சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து  செந்திலை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு பழைய பஸ் நிலையம் அருகில் நின்று கொண்டிருந்த செந்திலை போலீசார் கைது செய்தனர்.

Next Story