நாமக்கல்லில் உலக வனநாள் விழிப்புணர்வு மனிதசங்கிலி


நாமக்கல்லில் உலக வனநாள் விழிப்புணர்வு மனிதசங்கிலி
x
தினத்தந்தி 21 March 2022 11:52 PM IST (Updated: 21 March 2022 11:52 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் உலக வனநாள் விழிப்புணர்வு மனிதசங்கிலி நடந்தது.

நாமக்கல்:
உலக வனநாள் மற்றும் உலக தண்ணீர் தினத்தையொட்டி நேற்று நாமக்கல்லில் விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் தலைமை தாங்கினார். இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மாவட்ட செயலாளர் ராஜேஸ்கண்ணன் முன்னிலை வகித்தார். இதில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி இளைஞர் செஞ்சிலுவை சங்க தன்னார்வலர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். முன்னதாக வனங்களை காப்போம் என்று அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர். இதில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி இளைஞர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் வெஸ்லி, சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர பாண்டியன் மற்றும் வனத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட வனத்துறை மற்றும் ரெட்கிராஸ் சொசைட்டி ஆகியவை இணைந்து செய்து இருந்தன.

Next Story