புதுக்கோட்டை, விராலிமலை, ஆவுடையார்கோவிலில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வைரன் தலைமை தாங்கினார். துணை தாசில்தார் பட்டியல் திருத்தம் காரணமாக அனைத்து நிலைகளிலும் பணியிறக்க பாதிப்புகளை முழுமையாக சரி செய்ய வேண்டும். முதுநிலை வருவாய் ஆய்வாளர் பதவி உயர்விற்கு அடிப்படை மற்றும் நில அளவை பயிற்சி பெறாத நிலையிலும் நிபந்தனை அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
விராலிமலை தாலுகா அலுவலகத்தின் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு விராலிமலை வட்ட கிளை தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். இதில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
இதேபோல் ஆவுடையார்கோவில் தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட துணை தலைவர் சந்தானராஜ் தலைமை தாங்கினார். இதில் ஆவுடையார்கோவில் வட்ட கிளை செயலாளர் கருப்பையா மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story