வாலிபர் திடீரென இறந்தார். உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகை


வாலிபர் திடீரென இறந்தார். உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகை
x
தினத்தந்தி 21 March 2022 11:56 PM IST (Updated: 21 March 2022 11:56 PM IST)
t-max-icont-min-icon

வாலிபர் திடீரென இறந்தார். இதனால் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ் (வயது 24). இவர் உடல் நலம் சரியில்லாமல் இருந்தார். இதனால் அவர் சிகிச்சைக்காக கடந்த 17-ந்தேதி ராணிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி லோகேஷ் திடீரென உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இது குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் சமரசம் ஏற்பட்டதும் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story