பட்டியலின மக்களுக்கு ஒதுக்கிய இடத்தை மீட்டுத்தர வேண்டும். கலெக்டரிடம் கோரிக்கை மனு
பட்டியலின மக்களுக்கு ஒதுக்கிய இடத்தை மீட்டுத்தர வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
நெமிலி
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த நெடும்புலி ஊராட்சியில் பட்டியலின மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் வெளியூரை சேர்ந்தவர்கள் கடந்த சில ஆண்ட்டுகளாக ஆக்கிரமிப்பு செய்து வசித்து வருகின்றனர். இதனால் பட்டியலின மக்கள் தங்களின் வசிப்பிட தேவைக்கு இடமின்றி அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து நெடும்புலி ஊராட்சி மன்ற தலைவர் மாறன் தலைமையில் 20-க்கும் மேற்பட்டோர் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியனை நேரில் சந்தித்து, பட்டியலின மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை மீட்டுத் தர வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.
Related Tags :
Next Story