சாகச நிகழ்ச்சியில் அசத்திய மாணவ-மாணவிகள்
நாகை புதிய கடற்கரையில் நடந்த சுதந்திர தின அமுத பெருவிழாவில் சாகச நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகள் அசத்தினர்.
வெளிப்பாளையம்:
நாகை புதிய கடற்கரையில் நடந்த சுதந்திர தின அமுத பெருவிழாவில் சாகச நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகள் அசத்தினர்.
அமுத பெருவிழா
நாகை மாவட்டம் புதிய கடற்கரையில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் 75-வது ஆண்டு சுதந்திர தின விழாவையொட்டி அமுத பெருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இந்த விழாவை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார். இதில் பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகளின் பல்வேறு விளையாட்டு போட்டிகளும், கலை பண்பாடுத்துறை சார்பில் கலை நிகழ்ச்சிகளும்ள மற்றும் செங்கல்பட்டு மல்லர் கம்பம் சாகச நிகழ்ச்சியும் நடந்தது. இதில் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு சாகச நிகழ்ச்சிகளை செய்து அசத்தினர்.
கலைநிகழ்ச்சிகள்
இந்த விழா நடக்கும் ஒரு வாரமும் மாலையில் பராம்பரிய கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கலந்துக்கொண்டு கண்காட்சி அரங்குகளையும், நிகழ்ச்சிகளையும் கண்டுகளிக்கலாம் என கலெக்டர் கூறினார்.
விழாவில் மாவட்ட வன உயிரின காப்பாளர் யோகேஷ்குமார் மீனா, போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர், காரைக்கால் மாவட்ட முதுநிலை போலீஸ் சூப்பிரண்டு நாராசைதன்யா, மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், நகர்மன்ற தலைவர்கள் மாரிமுத்து(நாகை), புகழேந்தி(வேதாரண்யம்), செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தனபால், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமன், நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
கண்காட்சி
தொடர்ந்து நாகை அவுரிதிடலில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சி, மீன்வள பல்கலைக்கழகம், சமூக நலன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் பாரம்பரிய ஊட்டச்சத்து நிறைந்த இயற்கை உணவு அரங்கம் மற்றும் பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்ட அரங்குகளை கலெக்டர் திறந்து வைத்து பார்வையிட்டார்.
Related Tags :
Next Story