வேன் மோதிய விபத்தில் மூதாட்டி படுகாயம்
வேன் மோதிய விபத்தில் மூதாட்டி படுகாயம் அடைந்தார்.
நொய்யல்,
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே காட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் காசியண்ணன் (வயது 36). இவர் தனது பாட்டி மாரியம்மாள் (70) என்பவரை மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு கரூர் மாவட்டம் லந்தக்கோட்டையில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்றார். பின்னர் மீண்டும் அந்தியூர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் கரூர்- ஈரோடு நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது புன்னம்சத்திரம் தனியார் பள்ளி அருகே உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிடுவதற்காக மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு கரூர் -ஈரோடு நெடுஞ்சாலையை கடந்தனர். அப்போது மாரியம்மாள் சாலையை கடந்த போது அந்த வழியாக ஈரோடு மாவட்டம் பெரியசேமூர் மீனாட்சிசுந்தரம் வீதியை சேர்ந்த முருகானந்தம் (31) என்பவர் ஓட்டி வந்த வேன் எதிர்பாராத விதமாக மாரியம்மாள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீசார் முருகானந்தம் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அந்த வேனும் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story