அரசு ஆஸ்பத்திரியில் செல்போன் திருடிய வாலிபருக்கு தர்ம அடி
விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் செல்போன் திருடிய வாலிபருக்கு தர்ம அடி விழுந்தது.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அடுத்த ஏ.சித்தூர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவருடைய மனைவி லலிதா (வயது 40). இவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வவந்தனர்.
இந்நிலையில் சாத்துக்கூடல் மேல்பாதி கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் (30) என்பவர் ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவர் திடீரென லலிதாவின் செல்போனை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த லலிதா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பிரபாகரனை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவரிடம் இருந்து செல்போனை கைப்பற்றினார்.
போலீசார் விசாரணை
இதையடுத்து அவரை விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்து புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story