தர்கா சந்தனக்கூடு ஊர்வலம்


தர்கா சந்தனக்கூடு ஊர்வலம்
x
தினத்தந்தி 22 March 2022 12:08 AM IST (Updated: 22 March 2022 12:08 AM IST)
t-max-icont-min-icon

கோடியக்காடு தர்கா சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற்றது.

வேதாரண்யம்,மார்ச்.22
வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு அவுலியாக்கன்னி ஒலியுல்லாஹ் தர்காவில் சந்தனக்கூடு விழா நடைபெற்றது.முன்னதாக கோடியக்கரை முகைதீன்பள்ளி வாசலில் இருந்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனகூடு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக தர்காவிற்கு கொண்டு வரப்பட்டது. இந்த ஊர்வலத்தில் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என மும்மதத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.மேலும் சந்தனக்கூட்டிற்கு முந்திரி, திராட்சை, ஊதுபத்தியை காணிக்கையாக வழங்கினர். சந்தனக்கூடு ஊர்வலம் கோடியக்காடு  தர்காவிற்கு வந்தடைந்ததும், சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கோடியக்காடு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ் மணி, விழாக்குழு தலைவர் ஜின்னா மற்றும் விழா கமிட்டி உறுப்பினர்கள் அஜ்மீர்கான், அலிமெக்தர், சாபீக், கல்பான், இம்ராஜ் மற்றும் ஜாமத் மன்றத்தினர் கலந்துகொண்டனர்.

Next Story