வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம்
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்,
துணை தாசில்தார் பட்டியல் திருத்தம் காரணமாக அனைத்து நிலைகளிலும் பணியிறக்கம் பாதிப்புகளை முழுமையாக சரி செய்ய வேண்டும். முதுநிலை வருவாய் ஆய்வாளர் பதவி உயர்வுக்கு அடிப்படை மற்றும் நில அளவை பயிற்சி பெறாத நிலையிலும், நிபந்தனை அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அலுவலகங்களில் இருந்து வெளிநடப்பு செய்து, ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
வெளிநடப்பு
அதன்படி இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்டத்தில் நேற்று மாலை அரசு அலுவலகங்களில் இருந்து வருவாய்த்துறை அலுவலர்கள், அலுவலக உதவியாளர்கள் முதல் தாசில்தார் வரை 400-க்கும் மேற்பட்டவர்கள் 1 மணி நேரம் வெளி நடப்பு செய்து போராட்டம் நடத்தினர்.
கடலூரில் கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களில் பணியாற்றி வந்த வருவாய்த்துறையினர் வெளிநடப்பு செய்து, கலெக்டர் அலுவலகத்தில் ஒன்று திரண்டனர். தொடர்ந்து அவர்கள் அங்கு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோஷங்கள்
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் மகேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாவட்ட துணை தலைவர் பூபாலசந்திரன், தாசில்தார் ஸ்ரீதரன், துணை தலைவர் ராஜேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் மகளிரணி ஜான்சிராணி, மத்திய செயற்குழு உறுப்பினர் ரத்தினகுமரன், அமர்நாத், பார்த்திபன் உள்பட சங்க நிர்வாகிகள், வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.
சிதம்பரம்
இதேபோல் சிதம்பரம் தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்சங்கத்தினர் வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட துணை தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். வட்ட தலைவர் சோமசுந்தரம், வட்ட செயலாளர் நாகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அலுவலர்கள் கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story