தீயில் கருகிய கர்ப்பிணி சாவு


தீயில் கருகிய கர்ப்பிணி சாவு
x
தினத்தந்தி 22 March 2022 12:24 AM IST (Updated: 22 March 2022 12:24 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் அருகே தீயில் கருகிய கர்ப்பிணி பரிதாபமாக இறந்தார்.

விருத்தாசலம், 

விருத்தாசலம் அடுத்த விஜயமாநகரம் புது இளவரசன்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சிவகண்டன் (வயது 30). தொழிலாளி. இவரது மனைவி பஞ்சவர்ணம் (27). தாய் சகுந்தலா (62). இவர்கள் 3 பேரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு  தங்களுடைய கூரை வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் சிவகண்டன் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் தீக்காயம் அடைந்த பஞ்சவர்ணம், சகுந்தலா ஆகிய இருவரும் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு  ஆஸ்பத்திரியில்  அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில்  அனுமதிக்கப் பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பஞ்சவர்ணம் பரிதாபமாக இறந்தார். இவர் 5 மாத கர்ப்பிணியாக இருந்தது குறிப்பிடத்தக்கதாகும். சகுந்தாலவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மங்கலம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Related Tags :
Next Story