நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
சிங்கம்புணரி, காளையார்கோவிலில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
காளையார்கோவில்,
நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை விரைந்து அகற்ற வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் வருவாய்த்துைறயினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சிங்கம்புணரி அருகே உள்ள அரசினம்பட்டி கிராமத்தில் நீர்நிலை புறம்ேபாக்கில் செல்வம் என்பவர் வீடு கட்டி இருந்தார். அவரை வீட்டை விட்டு காலி செய்யும்படி மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. பின்னர் பொக்ைலன் எந்திரம் மூலம் வீடு இடித்து அகற்றப்பட்டது. இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் சிங்கம்புணரி தாசில்தார் கயல்செல்வி, சிங்கம்புணரி வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமண ராஜு, மண்டல துணை தாசில்தார், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், சிங்கம்புணரி உள்வட்ட வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் ஈடுபட்டனர். சிங்கம்புணரி சப்-இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
காளையார் கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட 30 இடங்களில் நீர்நிலை மற்றும் வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்புக்கள் செய்யப்பட்டுள்ளதை அகற்றும் நடவடிக்கையில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். மாவட்டத்தில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அவற்றினை அகற்ற சிவகங்கை கலெக்டர் மதுசூதன் ரெட்டி உத்தரவின்பேரில் காளையார்கோவில் பகுதியில் தாசில்தார் பாலகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியன் ஆகியோர் தலைமையில் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அளவிடும் பணியில் ஈடுபட்டனர். இதில் மாரந்தை வருவாய் கிராமத்தில் 11 நீர்நிலைகள், கோளாந்தி கண்மாய், நாட்டரசன்கோட்டை அரசு புறம்போக்கு, கவுரிப்பட்டி கண்மாய், ஓய்யவந்தான் வரத்துக்கால்வாய், சென்னலங்குடி ஊருணி, எம்.வேலாங்குளம் கண்மாய், பெருங்கரை வாய்க்கால், சோமநாத மங்கலம் கண்மாய், உழவன்வயல் கண்மாய், பால்குளம் உள்பட 30 நீர்நிலை ஆக்கிரமிப்புகளை கண்டறியப்பட்டு உள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை வருகிற 30-ந்தேதிக்குள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக 2 பொன்ைலன் எந்திரங்கள் வழங்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story