அகர்பத்தி தயாரிப்பாளரை தாக்கிய 2 பேர் கைது


அகர்பத்தி தயாரிப்பாளரை தாக்கிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 22 March 2022 12:42 AM IST (Updated: 22 March 2022 12:42 AM IST)
t-max-icont-min-icon

அகர்பத்தி தயாரிப்பாளரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

 திருப்பத்தூர்

திருப்பத்தூர் அரசமர தெருவை சேர்ந்தவர் பாபு (வயது 50). இவர் திருப்பத்தூர் அடுத்த வெங்களாபுரம் பகுதியில் அகர்பத்தி தொழில் நடத்தி வருகிறார். இவருக்கும், ராச்சமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (48), விஸ்வநாதன் (53) ஆகியோருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று பாபு கச்சேரி தெருவில் சென்றுகொண்டிருந்தபோது, கோவிந்தன், விஸ்வநாதன் அவரது ஆதரவாளர்கள் வெங்கட்டம்மாள், மகாலட்சுமி ஆகியோர் பாபுவை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் படுகாயமடைந்த பாபுவை அங்கிருந்தவர்கள் மீட்டு, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பாபு திருப்பத்துார் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து கோவிந்தன், விஸ்வநாதன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாகியுள்ள வெங்கட்டம்மாள், மகாலட்சுமி ஆகிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.

Next Story