300 பட்டாசு ஆலைகள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
சரவெடி தயாரிக்க அனுமதி அளிக்க வலியுறுத்தி 300 பட்டாசு ஆலைகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கின.
தாயில்பட்டி,
சரவெடி தயாரிக்க அனுமதி அளிக்க வலியுறுத்தி 300 பட்டாசு ஆலைகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கின.
அதிகாரிகள் ஆய்வு
கோர்ட்டு உத்தரவுப்படி பட்டாசு ஆலைகளில் பேரியம் நைட்ரேட் மற்றும் சரவெடிகளை உற்பத்தி செய்யக்கூடாது என விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இதையும் மீறி சரவெடி பட்டாசுகள் தயாரிக்கப்படுகிறதா என ஆலைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஆய்வின் போது அனுமதியின்றி தயார் செய்யப்பட்ட பட்டாசுகள் பறிமுதல் செய்யப்படுவதுடன், ஆலையின் உரிமமும் ரத்து செய்யப்பட்டன.
வேலை நிறுத்தம்
இந்தநிலையில் விருதுநகர் மாவட்டத்தில் வெம்பக்கோட்டை தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கத்தில் உள்ள 300 பட்டாசு ஆலைகளின் உற்பத்தியாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
இந்தநிலையில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் விதிகளில் இருந்து பட்டாசு தொழிலுக்கு விலக்கு அளிக்க வேண்டும். சரவெடி தயாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றவில்லை என்றால் போராட்டத்தின் 2-வது கட்டமாக வருகிற 24-ந் தேதி விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, பட்டாசு ஆலைகளின் சாவிகளை மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடைபெறும் என பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story