தினத்தந்தி புகார் பெட்டி
தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
நாய்கள் தொல்லை
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா பொன்னவராயன்கோட்டை கிராமத்தில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை அந்த பகுதியில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படும் கோழி, ஆடுகளை கடித்து தின்றுவிடுகின்றன. மேலும், சாலையில் செல்லும் பொதுமக்களை விரட்டி சென்று கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள் சாலையில் அச்சத்துடன் நடந்து சென்று வருகின்றனர். அதுமட்டுமின்றி சாலையில் செல்லும் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களை துரத்தி செல்வதால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், பொன்னவராயன்கோட்டை.
Related Tags :
Next Story