பாலியல் குற்றவாளி மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
பாலியல் குற்றவாளி மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது
திருச்சி
திருச்சி அருகே உள்ள கோப்பு நடுத்தெருவை சேர்ந்தவர் சண்முகம் என்ற மண்டை சண்முகம். இவர், இளம்பெண் ஒருவரிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீசாரால் சமீபத்தில் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கைதான சண்முகம் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் உள்ளதால், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய ஜீயபுரம் சப்-டிவிசன் துணை போலீஸ் சூப்பிரண்டு, அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமாருக்கு பரிந்துரை செய்திருந்தனர். அவர், மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசுக்கு சிபாரிசு செய்தார். அதை கலெக்டர் ஏற்று, நேற்று பாலியல் குற்றவாளியான மண்டை சண்முகத்தை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story