நகரில் துப்புரவு பணிகளை மேம்படுத்த நடவடிக்கை
நகரில் துப்புரவு பணிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி தலைவர் கூறினார்.
விருதுநகர்,
நகரில் துப்புரவு பணிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி தலைவர் கூறினார்.
அறிமுக கூட்டம்
விருதுநகர் நகரசபையில் நகரசபை தலைவர் மாதவன் தலைமையில் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கமிஷனர் சையது முஸ்தபா கமால், துணைத்தலைவர் தனலட்சுமி மற்றும் நகரசபை அலுவலர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பேசிய நகரசபை தலைவர் மாதவன், நகரசபை கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் உள்ள குறைகளை சம்பந்தப்பட்ட அலுவலரிடம் தெரிவிக்குமாறும் அதற்கு தீர்வு கிடைக்காத பட்சத்தில் தனக்கு தெரிவிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
மேலும் எந்தெந்த துறைகள் பற்றிய புகார்கள் குறித்து யாரிடம் தெரிவிக்க வேண்டும் என்ற விவரங்களையும் தெரிவித்தார்.
துப்புரவு பணி
நகரில் துப்புரவு பணிகளை மேம்படுத்துவதற்கும், கூடுதல் துப்புரவு பணியாளர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
விருதுநகர் அண்ணாமலையம்மாள் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை மகப்பேறு ஆஸ்பத்திரியாக மேம்படுத்தவும், நகர் பகுதியில் 3 இடங்களில் மினி சிகிச்சை மையங்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இதற்கான ஆலோசனைகளை ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் எம்.எல்.ஏ. வழங்கி வருவதாகவும் தெரிவித்தார். கவுன்சிலர்கள் பலரும் நகர் மேம்பாட்டுக்கான ஆலோசனைகளை தெரிவித்தனர்.
Related Tags :
Next Story