கோவில் அருகே டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய கூடாது


கோவில் அருகே டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய கூடாது
x
தினத்தந்தி 21 March 2022 7:51 PM GMT (Updated: 21 March 2022 7:51 PM GMT)

இருக்கன்குடியில் கோவில் அருகே டாஸ்மாக்கடை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

விருதுநகர், 
இருக்கன்குடியில் கோவில் அருகே டாஸ்மாக்கடை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். 
டாஸ்மாக்கடை 
இருக்கன்குடி பஞ்சாயத்து துணைத்தலைவர் ஜெயக்குமார் மற்றும் கிராம மக்கள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- 
 இருக்கன்குடி மேலத்தெருவில் ஏற்கனவே டாஸ்மாக்கடை செயல்பட்டு வருகிறது. இதனை அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு இடமாற்றம் செய்ய ஆயத்த வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அவ்வாறு இடமாற்றம் செய்யப்பட உள்ள இடத்தின் அருகில் 70 ஆண்டுகளாக உள்ள முருகன் கோவில் மற்றும் கிராம நிர்வாக அலுவலகமும், பெண்கள் பொது கழிப்பிடமும்,  குடியிருப்பு பகுதிகளும் உள்ளன.  
திருவீதிஉலா
புதிதாக அமைக்கப்பட உள்ள டாஸ்மாக் கடை பகுதி இருக்கன்குடி மாரியம்மன் திருவீதிஉலா வரும் வழித்தடம் ஆகும். இந்த இடத்தில் டாஸ்மாக் கடை அமைந்தால் கோவில் புனிதத்தன்மையை பாதிக்கும். இது தொடர்பாக முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கும், தங்களுக்கும், டாஸ்மாக் நிறுவனத்திற்கும் பொதுமக்கள் சார்பாக மேற்படி டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுக்கப்பட்டுள்ளது. 
ஆனால் அதனை மீறி தற்போது பிரச்சினைக்குரிய இடத்தில் டாஸ்மாக் கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே கோவில் அருகே டாஸ்மாக் கடை அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். 
இ்வ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story