கோவில்களில் சசிகலா சாமி தரிசனம்


கோவில்களில் சசிகலா சாமி தரிசனம்
x
தினத்தந்தி 22 March 2022 1:23 AM IST (Updated: 22 March 2022 1:23 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் பகுதிகளில் உள்ள கோவில்களில் சசிகலா சாமி தரிசனம் செய்தார். ராகுபெயர்ச்சி விழாவிலும் அவர் கலந்து கொண்டார்.

கும்பகோணம்:
கும்பகோணம் பகுதிகளில் உள்ள கோவில்களில் சசிகலா சாமி தரிசனம் செய்தார். ராகுபெயர்ச்சி விழாவிலும் அவர் கலந்து கொண்டார்.  
சசிகலா சாமி தரிசனம் 
தஞ்சையில் இருந்து சசிகலா நேற்று காலை கும்பகோணத்துக்கு காரில் வந்தார். பின்னர் கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரர் கோவில், சக்கரபாணி கோவில், சாரங்கபாணி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சசிகலா சாமி தரிசனம் செய்தார். 
ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனத்தை முடித்து விட்டு வெளியில் வந்த சசிகலா, கோவில் யானை மங்கலத்துக்கு வாழைப்பழம் கொடுத்தார். 
தொடர்ந்து கும்பகோணம் பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ராகுகால காளியம்மன் கோவிலில் சசிகலா பயபக்தியுடன் சிறப்பு வழிபாடு நடத்தினார். 
சூரியனார் கோவில் 
கும்பகோணம் அருகே உள்ள சூரியனார் கோவிலில் சிவசூரிய பெருமான் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நேற்று சசிகலா வந்தார். அப்போது அவருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கோள்வினை தீர்த்த விநாயகர் சன்னதி முதல் அனைத்து நவகிரக சன்னதிகளுக்கும் சென்று வழிபாடு செய்தார். அப்போது சிவசூரிய பெருமான் உற்சவருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டார்.
 சூரியனார் கோவிலுக்கு வந்த சசிகலாவை பார்ப்பதற்காக அந்த  பகுதி கிராம மக்கள் கோவிலின் வெளியே கூடியிருந்தனர். அவர்களுக்கு வணக்கம் தெரிவித்து விட்டு சசிகலா அங்கிருந்து புறப்பட்டு சென்றார். தொடர்ந்து கஞ்சனூர் சுக்கிரன் தலத்திற்கு சென்று வழிபட்டார். தரிசனம் முடிந்து  வெளியில் வரும்போது வாசலில் காத்திருந்த கட்சி பிரமுகர்களிடம் பேசினார். 
ராகுபெயர்ச்சி விழாவிலும் பங்கேற்பு
முன்னதாக திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோவிலில் நடந்த ராகுபெயர்ச்சி விழாவில் சசிகலா கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். அப்போது அவருக்கு கோவில் அர்ச்சகர்கள் பிரசாதம் வழங்கினர்.

Next Story