சிவகாசியில் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது
சிவகாசி பகுதியில் கடுமையான வெயில் இருந்து வரும் நிலையில் கோடைக்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என்று மாநகராட்சி அதிகாரி உறுதி அளித்துள்ளார்.
சிவகாசி,
சிவகாசி பகுதியில் கடுமையான வெயில் இருந்து வரும் நிலையில் கோடைக்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என்று மாநகராட்சி அதிகாரி உறுதி அளித்துள்ளார்.
கடுமையான வெயில்
சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடர் மழை பெய்தது. இதன் காரணமாக பல்வேறு நீர் நிலைகள் நிரம்பின. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சிவகாசி பகுதியில் கடுமையான வெயில் காரணமாக நீர்நிலைகள் வறண்டு வருகிறது.
இதனால் சிவகாசி பகுதியில் அடுத்து வரும் மாதங்களில் போதிய குடிநீர் இன்றி தவிக்கும் சூழ்நிலை உருவாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.
குடிநீர் வினிேயாகம்
இந்த நிலையில் சிவகாசி மாநகராட்சி பொறியாளர் பிரிவு அதிகாரி அழகேஸ்வரி தினத்தந்தி நிருபரிடம் கூறியதாவது:-
சிவகாசி மாநகராட்சி பகுதியில் தற்போது 5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது மானூர் கூட்டுக்குடிநீர்திட்டத்தின் மூலம் தினமும் 25 லட்சம் லிட்டர் தண்ணீர் பெறப்படுகிறது. அதேபோல் வெம்பக் கோட்டை அணையில் இருந்து 21 லட்சம் லிட்டர் தண்ணீர் பெறப்பட்டு சிவகாசி பகுதியில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது சிவகாசி பகுதியில் கடுமையான வெயில் இருந்த போதும் நமக்கு தேவையான தண்ணீர் வெம்பக்கோட்டை அணையில் இருக்கிறது. மேலும் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 489 ஆழ்துளை கிணறுகள் உள்ளன.
தட்டுப்பாடு இருக்காது
அதில் சுமார் 30-க்கும் குறைவான ஆழ்துளை கிணறுகள் பழுதுபார்க்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் முடிந்த பின்னர் தண்ணீர் தட்டுப்பாடு கண்டிப்பாக இருக்காது.
தேவைப்பட்டால் மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள நீர்நிலைகளில் இருந்து தண்ணீர் எடுத்து பயன்படுத்த தயாராக இருக்கிறோம். தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் இருக்க தேவையான அனைத்து ஆலோசனைகளையும் கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி வழங்கி உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story