மழையால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம்-மந்திரி ஆர்.அசோக்


மழையால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம்-மந்திரி ஆர்.அசோக்
x
தினத்தந்தி 22 March 2022 2:10 AM IST (Updated: 22 March 2022 2:10 AM IST)
t-max-icont-min-icon

மழையால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படுவதாக மந்திரி ஆர்.அசோக் தெரிவித்துள்ளார்

பெங்களூரு: கர்நாடக சட்டசபையில் நேற்று பூஜ்ஜிய நேரத்தில் பா.ஜனதா உறுப்பினர் குமார் பங்காரப்பா எழுந்து, மழை பாதிப்புகள் குறித்தும், நிவாரணம் கேட்டும் பிரச்சினை கிளப்பி பேசினார். அதற்கு வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பதிலளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் திடீரென எதிர்பாராத வகையில் மழை பெய்து வருகிறது. சிவமொக்கா மாவட்டம் சொரப் தொகுதியில் பெய்த மழைக்கு மரம் முறிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். மாநிலத்தில் மழையால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படும். அங்கு 182 மின் கம்பங்கள், 8 மின்மாற்றிகள், 5 பள்ளி கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன. 265 எக்டேரில் விவசாய பயிர்கள் சேதமடைந்துள்ளன. இவற்றுக்கு நிவாரணம் வழங்கப்படும். தேசிய இயற்கை பேரிடர் நிவாரண விதிகளின்படி நிவாரணம் வழங்கப்படும்’’ என்றார்.

முன்னதாக பேசிய குமார் பங்காரப்பா, ‘‘எதிர்பாராத நிலையில் பெய்து வரும் மழைக்கு எனது தொகுதியில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும். 50-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. அவற்றுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்’’ என்றார்.

Next Story