உலக வன நாள்: நெல்லை மாநகராட்சியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
நெல்லை மாநகராட்சியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது
நெல்லை:
உலக வன நாளையொட்டி நெல்லை மாநகராட்சி மைய அலுவலக பூங்காவில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. மேயர் பி.எம்.சரவணன் மரக்கன்றுகளை நட்டினார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன், மாநகர பொறியாளர் (பொறுப்பு) நாராயணன், தச்சநல்லூர் மண்டல உதவி ஆணையாளர் (பொறுப்பு) லெனின், கவுன்சிலர் சங்கர்குமார், பரோடா வங்கி மேலாளர் வீரண்ணா ஆகியோர் கலந்து கொண்டனர்.
* களக்காடு அருகே படலையார்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உலக வன நாள் விழா நடந்தது. களக்காடு சூழல் மேம்பாட்டு திட்ட அதிகாரியும், துணை வன பாதுகாவலருமான அன்பு தலைமை தாங்கினார். சூழல் திட்ட வனவர் அப்துல் ரஹ்மான் வரவேற்று பேசினார். அரசு மருத்துவமனை டாக்டர் ரிஷ்கிந்த் குமார் பேசினார். ஆனந்த், வெங்கடேஷ், ராஜாராம் மரக்கன்றுகள் நட்டினர். தொடர்ந்து வனத்தையும், வன வளங்களையும், பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நடைபயணம் நடந்தது. பள்ளியில் இருந்து தொடங்கிய நடைபயணம் படலையார்குளத்தில் முக்கிய தெருக்களின் வழியாக சென்றது. தலைமை ஆசிரியை சாந்தி, பஞ்சாயத்து தலைவர் முருகன் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
*நெல்லை அருகே கொண்டாநகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உலக வன நாள் விழா நடந்தது. பஞ்சாயத்து தலைவர் ஆ.சொர்ணம் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை செல்வி முன்னிலை வகித்தார். உதவி வன பாதுகாவலர் ஹேமலதா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு மரக்கன்றுகள், இனிப்புகளை வழங்கி பேசினார். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டினார்.
Related Tags :
Next Story