ரெயிலில் அடிபட்டு முதியவர் சாவு
ரெயிலில் அடிபட்டு முதியவர் உயிரிழந்தார்.
அரியலூர்:
அரியலூர் அருகே உள்ள சில்லக்குடி - கல்லகம் ரெயில் நிலையங்களுக்கு இடையே ஆண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக அரியலூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன், போலீசாருடன் அங்கு விரைந்து சென்று இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். இறந்து கிடந்தவருக்கு சுமார் 60 வயது இருக்கலாம். சந்தன நிற சட்டையும், ஊதா நிறத்தில் பூ போட்ட கைலியும் அணிந்து இருந்தார். அவரது சட்டைப்பையில் அரசு பஸ் பயணச்சீட்டு ஒன்று இருந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர். மேலும் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது உள்ளிட்டவை குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story