நகைக்கடன் தள்ளுபடி குறித்து பட்டியல் வெளியீடு


நகைக்கடன் தள்ளுபடி குறித்து பட்டியல் வெளியீடு
x
தினத்தந்தி 22 March 2022 2:17 AM IST (Updated: 22 March 2022 2:17 AM IST)
t-max-icont-min-icon

நகைக்கடன் தள்ளுபடி குறித்து பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அரியலூர்:
தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு நிறுவனங்களில் மொத்த எடை 40 கிராமுக்கு உட்பட்டு நகைக்கடன் பெற்று 31.3.2021 அன்று நிலுவையில் இருந்த நகைக்கடன்களில் தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான தள்ளுபடி சான்றிதழ் மற்றும் அதற்குண்டான நகைகள் திரும்ப வழங்கப்பட்டு வருகிறது. தள்ளுபடிக்கு தகுதி வாய்ந்தவர்கள் மற்றும் தள்ளுபடிக்கு தகுதி பெறாதவர்கள் பட்டியல் அனைத்து கூட்டுறவு நிறுவனங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஆட்சேபனைகள் ஏதேனும் இருப்பின் பட்டியல் வெளியிடப்பட்ட 30 நாட்களுக்குள் அரியலூர் சரக துணைப்பதிவாளரிடம் மேல்முறையீட்டு மனு அளித்து தீர்வு காணலாம்.
இந்த தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story