ஊரடங்கு தளர்வு அறிவிப்பால், இந்திய தொழிலாளர்கள் மலேசியாவிற்கு வரலாம்
ஊரடங்கு தளர்வு அறிவிப்பால், இந்திய தொழிலாளர்கள் மலேசியாவிற்கு வரலாம் என்று தூதர் தெரிவித்தார்.
வேப்பந்தட்டை:
இந்திய நாட்டிற்கான மலேசிய தூதர் அப்துல் ஹமீதுஹிதாயத் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பூலாம்பாடியில் உள்ள தொழிலதிபரை நேரில் சந்தித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், கொரோனா தொற்றினால் மலேசியா நாட்டில் பணியாற்றிய சுமார் 2 மில்லியன் தொழிலாளர்கள் சொந்த நாட்டிற்கு திரும்பியதால், மலேசியாவில் தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் மட்டுமின்றி நிறுவனங்களும் பாதிக்கப்பட்டு, பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மலேசிய நாட்டில் வருகிற ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முதல் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், மீண்டும் சகஜ நிலை திரும்பும். எனவே தொழிலாளர்கள் மீண்டும் மலேசியாவிற்கு திரும்ப முடியும். நிறுவனங்கள் வழக்கம்போல செயல்படும். மலேசியா திரும்பும் இந்திய தொழிலாளர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது அவசியம்.
உக்ரைன்-ரஷியா போரினால் மலேசியாவிற்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. மலேசியாவில் படிக்கும் இந்திய மாணவர்கள் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படவில்லை. எனவே மலேசியாவில் படிக்கும் இந்திய மாணவர்களை பற்றி அச்சப்படத் தேவையில்லை, என்றார்.
Related Tags :
Next Story