உலக வன நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன


உலக வன நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன
x
தினத்தந்தி 22 March 2022 2:22 AM IST (Updated: 22 March 2022 2:22 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் உலக வன நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன.

பெரம்பலூர்:
உலக வன நாளை முன்னிட்டு வனத்துறை சார்பில் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கு அருகே கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, மாவட்ட வன அலுவலர் குகனேஷ் முன்னிலையில் 21 மரக்கன்றுகளை நட்டு வைத்தார். அப்போது அவர் கூறுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு வனத்துறை நாற்றாங்கால் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட ஆயிரம் மரக்கன்றுகள் மாவட்டம் முழுவதும் நடப்பட்டது. வனத்துறை நாற்றாங்கால் மூலம் 21 ஆயிரத்து 621 மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, ஊரக வளர்ச்சி துறைக்கு வழங்குவதற்கு தயாராக உள்ளது. மேலும் தமிழ்நாடு நீடித்த நிலையான விவசாயிகள் நிலத்தின் பசுமை போர்வை திட்டத்தின் மூலமும், வனத்துறை நாற்றாங்கால் மூலமும் 1 லட்சத்து 70 ஆயிரத்து 700 மரக்கன்றுகள் உற்பத்தி செய்து வேளாண்மைத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது, என்றார். மேலும் மரத்தின் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்து பள்ளி மாணவ-மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Next Story