கொசு ஒழிப்பு தொழிலாளர்கள் போராட்டம்
கொசு ஒழிப்பு தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்
மதுரை, மார்ச்.22-
மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு மாத ஊதியம் முறையாக வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியதுபோல், குறைந்தபட்ச நாள் ஊதியம்ரூ.500 வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே 2 மாதமாக ஊதியம் வழங்காத மதுரை மாநகராட்சியை கண்டித்து ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். தென் மண்டல அமைப்பாளர் மாரி, மாநில துணைச் செயலாளர்கள் மோகன், முத்து, கனகேஸ்வரி, ராம்குமார் பாண்டியன், மத்திய தொகுதி செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், போராட்டம் கைவிடப்பட்டது.
Related Tags :
Next Story