புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 22 March 2022 2:34 AM IST (Updated: 22 March 2022 2:34 AM IST)
t-max-icont-min-icon

புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
விபத்து அபாயம்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் பகுதி சாலையில் நாய்கள் அதிக அளவில் சுற்றித்திாிகின்றன. வாகன ஓட்டிகளை தினமும் நாய்களால் துரத்துவதால் சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இதனால் இ்ந்த சாலை வழியாக செல்ல குழந்தைகள், ெபண்கள் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட  அதிகாரிகள் சுற்றித்திாியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
பொதுமக்கள், திருப்பத்தூா்.

குண்டும், குழியுமான சாலை 
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே சின்ன பொதிகுளம் கிராமத்திற்கு செல்லும் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்பவர்கள் சிரமத்துடன் செல்ல வேண்டியுள்ளது. அவசர காலத்தில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாத நிலை நிலவுகிறது. அதிலும் குறிப்பாக மாணவர்கள் சிரமத்துடன் தான் இந்த சாலையை கடந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்கின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், சின்னபொதிகுளம். 

கண்மாயில் கழிவுநீர்
சிவகங்கை மாவட்டம் கல்லல் ஊராட்சியின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்வதில் வடுகன் கண்மாய் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்நிலையில் இந்த கண்மாயில் சாக்கடை கழிவுநீரானது  கலக்கப்படுகிறது. மேலும் கண்மாயை சுற்றி ஆக்கிரமிப்புகளும், கருவேல மரங்களும் நிறைந்து காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைய வாய்ப்புள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்மாயில் கழிவுநீர் கலப்பதை தடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
பொதுமக்கள், கல்லல்.
நாய்கள் தொல்லை
ராமநாதபுரம் நகா் பகுதி சாலைகளில் ெதருநாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இரவில் வாகன ஓட்டிகளை துரத்தி ெசன்று கடிக்கின்றன. இதனால் இந்த சாைலயில் ெசல்ல பலரும் அச்சப்படுகிறாா்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாாிகள் உாிய நடவடிக்கை எடுத்து ெதருக்களில் சுற்றித்திாியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த ேவண்டும்.
அன்வா்தீன், ராமநாதபுரம்.

Next Story