நாகர்கோவிலில் 21 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது
நாகர்கோவிலில் 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா பறிமுதல்
நாகர்கோவில் கோட்டார் போலீசார் நேற்று ஊட்டுவாழ்மடம் ரெயில்வே கேட் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்கள் வைத்திருந்த மூடையில் 21 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் போலீசார் விசாரணை நடத்தியதில் ரெயில்வே காலனியை சேர்ந்த நம்பிராஜன் (வயது 24), வாகையடி தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற சைனா கோழி (26) என்பதும், அவர்கள் கஞ்சா வியாபாரி என்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story