பிரதமரின் அவாஸ் திட்டத்தில் கர்நாடகத்திற்கு 18 லட்சம் வீடுகள் ஒதுக்கீடு-மந்திரி சோமண்ணா


பிரதமரின் அவாஸ் திட்டத்தில் கர்நாடகத்திற்கு 18 லட்சம் வீடுகள் ஒதுக்கீடு-மந்திரி சோமண்ணா
x
தினத்தந்தி 22 March 2022 3:04 AM IST (Updated: 22 March 2022 3:04 AM IST)
t-max-icont-min-icon

பிரதமரின் அவாஸ் திட்டத்தில் கர்நாடகத்திற்கு 18 லட்சம் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக சட்டசபையில் மந்திரி சோமண்ணா தெரிவித்தார்

பெங்களூரு: பிரதமரின் அவாஸ் திட்டத்தில் கர்நாடகத்திற்கு 18 லட்சம் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக சட்டசபையில் மந்திரி சோமண்ணா தெரிவித்தார். 

18 லட்சம் வீடுகள் ஒதுக்கீடு

கர்நாடக சட்டசபையில் நேற்று உறுப்பினர் காங்கிரஸ் உறுப்பினர் சீனிவாஸ் மானே கேட்ட கேள்விக்கு வீட்டு வசதித்துறை மந்திரி சோமண்ணா பதிலளிக்கையில் கூறியதாவது:-

பிரதமர் அவாஸ் திட்டத்தின் கீழ் கர்நாடகத்திற்கு மொத்தம் 18 லட்சம் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் முதல் கட்டமாக 2 லட்சம் வீடுகள் கட்ட நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு இருக்கிறது. 

வருமான உச்சவரம்பு

மேலும் 3 லட்சம் வீடுகளுக்கு அனுமதி வழங்குமாறு மத்திய அரசிடம் கேட்டுள்ளேன். இந்த சட்டசபை கூட்டத்தொடர் நிறைவடைந்ததும் டெல்லிக்கு சென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன்.
வீட்டு வசதி திட்டங்களில் பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்க வருமான உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள (பி.பி.எல்.) ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு அரசே வீடு கட்டி கொடுப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். ஹாவேரி மாவட்டம் ஹனகல் மற்றும் விஜயாப்புரா மாவட்டம் சிந்தகி தொகுதிகளில் 5 ஆயிரம் வீடுகள் கட்டி கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

குடிசை பகுதிகளைமேம்படுத்த முடிவு

கோலார் தங்கவயலில் 17 குடிசை பகுதிகள் உள்ளன. அவற்றை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு வசிக்கும் குடியிருப்புவாசிகளுக்கு நில உரிமை பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு சோமண்ணா கூறினார்.

Next Story