நெல்லை: ஜாமீனில் வந்து தலைமறைவான கைதி கைது


நெல்லை: ஜாமீனில் வந்து தலைமறைவான கைதி கைது
x
தினத்தந்தி 22 March 2022 3:08 AM IST (Updated: 22 March 2022 3:08 AM IST)
t-max-icont-min-icon

ஜாமீனில் வந்து தலைமறைவான கைதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்

நெல்லை:
நெல்லை மாவட்டம், அம்பை அருகே உள்ள அகஸ்தியர்பட்டியைச் சேர்ந்தவர் சொர்ணபாண்டி (வயது 43). இவர் மீது நெல்லை மாநகர பகுதியில் கடந்த 2005-ம் ஆண்டு வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருந்தன. இந்த வழக்கில் நெல்லை கோர்ட்டில் தண்டனை பெற்று சிறையில் தண்டனை அனுபவித்து வந்த சொர்ணபாண்டி ஜாமீனில் வெளியே வந்தார். ஜாமீன் முடிந்து சிறைக்குச்செல்லாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில் நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் டி.பி.சுரேஷ்குமார் உத்தரவின்பேரில் தலைமறைவாக இருந்த கைதிகளை பிடிக்க பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று தீவிர விசாரணை நடத்தி நேற்று தலைமறைவாக இருந்த சொர்ணபாண்டியை கைது செய்து நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story