தாளவாடி அருகே தொட்டம்தாய் அம்மன் கோவில் குண்டம் விழா- பூசாரி மட்டும் தீ மிதித்தார்


தாளவாடி அருகே தொட்டம்தாய் அம்மன் கோவில் குண்டம் விழா- பூசாரி மட்டும் தீ மிதித்தார்
x
தினத்தந்தி 22 March 2022 3:48 AM IST (Updated: 22 March 2022 3:48 AM IST)
t-max-icont-min-icon

தாளவாடி அருகே தொட்டம் தாய் அம்மன் கோவில் குண்டம் விழா நடந்தது. இதில் பூசாரி மட்டும் தீ மிதித்தார்.

தாளவாடி
தாளவாடி அருகே தொட்டம் தாய் அம்மன் கோவில் குண்டம் விழா நடந்தது. இதில் பூசாரி மட்டும் தீ மிதித்தார்.
குண்டம் விழா
தாளவாடி அருகே நொய்தாளபுரம் கிராமத்தில் தொட்டம்தாய் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் குண்டம் திருவிழா நேற்று முன்தினம் மாலை சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து மேள தாளத்துடன் சாமி ஆபரணங்கள் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.
பின்னர் தொட்டம்தாய் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து இரவு கோவிலில் இருந்து மேள தாளம் முழங்க அம்மன் உற்சவ சிலை குளக்கரைக்கு எடுத்து செல்லப்பட்டது.
பூசாரி தீ மிதித்தார்
பின்னர் நேற்று அதிகாலை சாமி உற்சவர் சிலை குளத்தில் இருந்து கோவிலை வந்தடைந்தது. அதன்பின்னர் காலை 7 மணி அளவில் கோவில் முன்பு அமைக்கப்பட்ட குண்டத்தில் தீ வார்க்கப்பட்டு மலர்கள் தூவப்பட்டன. அதனைத் தொடர்ந்து பூசாரி சிக்குமாதய்யா குண்டம் இறங்கினார்.
அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள், “அம்மா தாயே” என பக்தி கோஷம் எழுப்பினார்கள். பூசாரியை தவிர பக்தர்கள் யாரும் குண்டம் இறங்கக்கூடாது என்பது ஐதீகம் என்பதால் பக்தர்கள் குண்டத்தை தொட்டு வழிபட்டனர்.


Next Story