சேலம் மாவட்டத்தில் ரூ.520 கோடியில் நகைக்கடன்கள் தள்ளுபடி-கலெக்டர் கார்மேகம் தகவல்


சேலம் மாவட்டத்தில் ரூ.520 கோடியில் நகைக்கடன்கள் தள்ளுபடி-கலெக்டர் கார்மேகம் தகவல்
x
தினத்தந்தி 22 March 2022 4:18 AM IST (Updated: 22 March 2022 4:18 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் ரூ.520 கோடியில் கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் கார்மேகம் கூறினார்.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் ரூ.520 கோடியில் கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் கார்மேகம் கூறினார்.
நகைக்கடன் தள்ளுபடி
சேலம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் மற்றும் கடன் சங்கங்களில் பொது நகைக்கடன் பெற்ற 61 பயனாளிகளுக்கு ரூ.23 லட்சத்து 45 லட்சத்திற்கான தள்ளுபடி சான்றிதழ்கள் மற்றும் நகைகள் வழங்கும் நிகழ்ச்சி, சேலம் அழகாபுரத்தில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சமுதாய கூடத்தில் நடைபெற்றது. இதில் கலெக்டர் செ.கார்மேகம், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ் மற்றும் நகைகளை வழங்கினர். 
அப்போது கலெக்டர் கார்மேகம் கூறியதாவது:-
சேலம் மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் 8,907 பேருக்கு ரூ.40 கோடியே 10 லட்சமும், 8 நகர கூட்டுறவு வங்கிகள் சார்பில் 12 ஆயிரத்து 523 பேருக்கு ரூ.40 கோடியே 98 லட்சமும், 203 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் சார்பில் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 808 பேருக்கு ரூ.378 கோடியே 99 லட்சமும் நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட உள்ளன. அதே போன்று 5 நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் சார்பில் 8 ஆயிரத்து 9 பேருக்கு ரூ.22 கோடியே 59 லட்சம், 5 பெரும் பலநோக்கு கூட்டுறவு சங்கங்கள் சார்பில் 1,289 பேருக்கு ரூ.5 கோடியே 69 லட்சம், 2 கூட்டுறவு விற்பனை சங்கங்களில் 4,059 பேருக்கு ரூ.10 கோடியே 93 லட்சம், 20 பணியாளர்கள் கூட்டுறவு கடன் சங்கம் மூலம் 4,251 பேருக்கு ரூ.11 கோடியே 58 லட்சம், 6 கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் மூலம் 1,747 பேருக்கு ரூ.6 கோடியே 51 லட்சம் நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளன.
கூட்டுறவு சங்கம்
அதே போன்று சேலம் கிளை கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் 548 பேருக்கு ரூ.1 கோடியே 70 லட்சம், நிலக்குடியேற்ற கூட்டுறவு சங்கத்தின் சார்பில் 348 பேருக்கு,  ரூ.1 கோடியே 10 லட்சம் என மொத்தம் மாவட்டத்தில் உள்ள 252 கூட்டுறவு வங்கிகள் மற்றும் கடன் சங்கங்களின் மூலம் பொது நகைக்கடன் பெற்ற ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 489 பேருக்கு ரூ.520 கோடி பொது நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் செந்தில்குமார், தணிக்கை துறையின் கூடுதல் இயக்குனர் முருகேசன், சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிக்குமார், சேலம் மண்டல கூட்டுறவு தணிக்கை இணை இயக்குனர் முருகன், சேலம் மாநகராட்சி கவுன்சிலர் மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story