சேலம் மணியனூரில் தொழிலாளிக்கு கத்திக்குத்து -வாலிபர் கைது; 2 பேர் தப்பிஓட்டம்
சேலம் மணியனூரில் தொழிலாளியை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அன்னதானப்பட்டி:
சேலம் மணியனூர் முத்து பிளாட் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 20), வெள்ளி பட்டறை தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த உசேன் (19), அரவிந்த், மணி ஆகிய 3 பேருக்கும் ஒரு பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அதே பகுதியில் உள்ள குப்பை குடோன் அருகே இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஆத்திரமடைந்த உசேன் தான் வைத்திருந்த கத்தியால் வெங்கடேசின் வயிற்று பகுதியில் திடீரென குத்தியுள்ளார். இதில் அவருக்கு ரத்தக்காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து வெங்கடேஷ் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில், அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகலா, சப்-இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து உசேனை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய அரவிந்த், மணி இருவரும் அங்கிருந்து தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story