ஓட்டல் தொழில் தொடங்க சென்னையில் இடம் வாங்கி தருவதாக கூறி ரூ.80 லட்சம் மோசடி


ஓட்டல் தொழில் தொடங்க சென்னையில் இடம் வாங்கி தருவதாக கூறி ரூ.80 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 22 March 2022 3:33 PM IST (Updated: 22 March 2022 3:33 PM IST)
t-max-icont-min-icon

ஓட்டல் தொழில் தொடங்க சென்னையில் இடம் வாங்கி தருவதாக கூறி ரூ.80 லட்சம் மோசடி செய்த நபர் நேற்று கைது செய்யப்பட்டார்.

கோவையை சேர்ந்தவர் சபரிகணேஷ்(வயது 33). இவர் ஓட்டல் நடத்தி வருகிறார். அதே போன்று சென்னையிலும் ஓட்டல் நடத்த உரிய இடம் பார்த்து வந்தார். இதை தெரிந்து கொண்ட சாலிகிராமத்தை சேர்ந்த சரவணன்(43) என்பவர், சபரிகணேசை தொடர்பு கொண்டு பேசியதாக தெரிகிறது. ஓட்டல் நடத்த உரிய இடம் இருப்பதாகவும், அதற்கு முறையான அனுமதி பெற்று தருவதாகவும் சரவணன் கூறியுள்ளார்.

அதற்காக ரூ.80 லட்சம் வாங்கிக்கொண்டு, உரிய ஏற்பாடு எதையும் செய்யாமல், ரூ.80 லட்சத்தை மோசடி செய்து விட்டதாகவும், சபரிகணேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மோசடி நபர் சரவணன் நேற்று கைது செய்யப்பட்டார்.


Next Story