மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த மேலும் 6 பேர் கைது
மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த மேலும் 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் சனிக்கிழமை இரவு மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் ஆரம்பித்து, திருவான்மியூர் வழியாக கிழக்கு கடற்கரை சாலை உத்தண்டி வரை மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்று சாகசம் காட்டுவதை இளைஞர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். போக்குவரத்து விதிமுறைகள் எதையும் கடைபிடிக்காமல் மோட்டார் சைக்கிளில் சென்று சாகசம் காட்டுவது சட்ட விரோதமாக பார்க்கப்படுகிறது. கடந்த சனிக்கிழமை அன்று நள்ளிரவில் மோட்டார் சைக்கிள்களில் அதிவேகமாக சென்ற 14 பேர் பிடிபட்டனர். அவர்கள் சென்ற 7 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் இந்த சம்பவத்தில் முகேஷ்(வயது 20), ரோமன்அல்கிரேட்(23), ஹரிகரன்(21), முகமது சாதிக்(20),ரகமத்துல்லா(20), முகமது ஆசிப்(19) ஆகிய 6 இளைஞர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story