பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி


பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி
x
தினத்தந்தி 22 March 2022 4:55 PM IST (Updated: 22 March 2022 4:55 PM IST)
t-max-icont-min-icon

பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி

சுதந்திர தின விழாவை  முன்னிட்டு சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தமிழகத்தின் பங்கு என்ற தலைப்பில்  பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை மற்றும் ஓவியப்போட்டிகள்,  பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளித்தலைமை ஆசிரியர் ப. விஜயா தலைமை தாங்கி, போட்டிகளைத்தொடங்கிவைத்தார். உதவித் தலைமை ஆசிரியர் ஏ.ஜெயராஜ் முன்னிலை வகித்தார். இந்தபோட்டிகளில் உடுமலைக்கல்வி மாவட்டத்தில் உள்ள நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 45 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இந்த போட்டிகள் நடைபெற்றதை பள்ளித்துணை ஆய்வாளர் எஸ்.கலைமணி பார்வையிட்டார். தமிழாசிரியர்கள் சரவணன், கார்த்திகா, புவனேஸ்வரி ஆகியோர் கட்டுரைப்போட்டி நடுவர்களாகவும், ஓவிய ஆசிரியர்கள் சிவகணேஷ், கிருஷ்ணமூர்த்தி, மகேஸ்வரி ஆகியோர் ஓவியப்போட்டியின் நடுவர்களாகவும் இருந்து போட்டிகளை நடத்தினர். பள்ளி தமிழாசிரியர்கள் சின்னராசு, ராசேந்திரன், ஓவிய ஆசிரியர் லாவண்யா ஆகியோர் போட்டிகளை ஒருங்கிணைத்தனர். கல்வி மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்டவர்கள், மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்பார்கள்.


Next Story