குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
சேவூர் அருகே கூட்டப்பள்ளியில் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட வழக்கில் கடந்த ஜனவரி 28 ந்தேதி புஞ்சை தாமரைக்குளம் பகுதியை சேர்ந்த அருள்குமார் புதுச்சந்தை பகுதியை சேர்ந்த புக்கான் என்கிற மூர்த்தி ஆகிய 2 பேரை சேவூர் போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் மீது சேவூர், அவினாசி, பெருமாநல்லூர் போலீஸ் நிலையங்களில் 50 க்கும் மேற்பட்ட வழிப்பறி உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதைத்தொடர்ந்து பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய அருள்குமார், புக்கான் என்ற மூர்த்தி ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதுசெய்ய திருப்பூர் மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி 2 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story