திருச்சி கோவில்களில் சசிகலா சாமி தரிசனம்
திருச்சி கோவில்களில் சசிகலா சாமி தரிசனம் செய்தார்.
திருச்சி, மார்ச்.23-
திருச்சி கோவில்களில் சசிகலா இன்று சாமி தரிசனம் செய்தார்.
ஆன்மிக சுற்றுப்பயணம்
சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி வெளியே வந்த சசிகலா அ.தி.மு.க.வை மீட்டெடுப்போம் என்று தெரிவித்தார். பின்னர் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்களுடன் செல்போனில் பேசினார். இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக சசிகலா தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டு முக்கிய ஆலயங்களில் சாமி தரிசனம் செய்து வருகிறார்.
இந்தநிலையில் இன்று காலை திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலுக்கு வந்த அவர் அங்கு சாமி தரிசனம் செய்தார். அப்போது கோவில் யானை அகிலாவிடம் அவர் ஆசி பெற்றார்.
சமயபுரம்
பின்னர் சமயபுரம் மாரியம்மன்கோவில், அக்கரைப்பட்டியில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். அங்கிருந்து உறையூர் வெக்காளியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த சசிகலா, அங்கு 100 பேருக்கு அன்னதானம் வழங்கினார். அப்போது அ.ம.மு.க. நிர்வாகிகள் பலர் உடன் வந்தனர். இதையடுத்து அவர் திருச்சியில் இருந்து காரில் தஞ்சை புறப்பட்டு சென்றார்.
---

Related Tags :
Next Story