புற்றுக்கண் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
புற்றுக்கண் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
சேவூர் அருகே உள்ள புற்றுக்கண் மாரியம்மன் கோவிலின் கும்பாபிஷேக விழா இன்று நடக்கிறது. இதையொட்டி பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
புற்றுக்கண் மாரியம்மன் கோவில்
மாட்டூர் என சுந்தரமூர்த்தி நாயன்மாரால் தேவார வைப்புத்தலமாக பாடல் பெற்றதும், நடுச்சிதம்பரம் என போற்றத்தக்கதும், வாலியினால் பூஜிக்கப்பட்ட வாலீஸ்வரர் கோவில் அமைந்துள்ள சேவூரில் ஆயிரம் கண்ணுடைய தேவியாக, ஆதிபராசக்தி சொரூபமாக, நாகதேவதையாக வீற்றிருக்கும் புற்றுக்கண் மாரியம்மன், வெற்றி விநாயகர் ஆகிய தெய்வங்களுக்கு புதிய ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று பகல் 2 மணிக்கு சேவூர் வாலீஸ்வரர் கோவிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம் பம்பை உடுக்கை மேளதாளத்துடன் புறப்பட்டது.
தீர்த்தக்குட ஊர்வலம்
மாரியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில், கைகாட்டி ஜெயங்கொண்ட விநாயகர் கோவில், புளியம்பட்டி சாலை முறியாண்டாம்பாளையம் சாலை, காமராஜ் நகர் ஆகிய முக்கிய வீதிகளின் வழியாக தீர்த்தக்குட ஊர்வலம் சென்று முடிவில் கோவிலை அடைந்தது. இதில் 400க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர்.
முக்கிய நிகழ்வாக இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் கோபுர விமான கலசங்களுக்கு கும்பாபிஷேகம், அதிகாலை 5 மணிக்கு மூலாலய வெற்றி விநாயகர், புற்றுக்கண் மாரியம்மனுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. காலை 7 மணி முதல் கோவில் வளாகத்தில் அன்னதானம் நடைபெறும்.
Related Tags :
Next Story