தேசிய அளவிலான கராத்தே போட்டியில் ஆதித்தனார் கல்லூரி மாணவர்கள் சாதனை
தேசிய அளவிலான கராத்தே போட்டியில் ஆதித்தனார் கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்
திருச்செந்தூர்:
பாளையங்கோட்டை அண்ணா உள்விளையாட்டு அரங்கில் முதலாவது தேசிய அளவிலான திறந்தவெளி கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் தேசிய அளவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில் திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த இளம் வணிகவியல் 3-ம் ஆண்டு சுயநிதி பிரிவு மாணவர் ச.சுப்பிரமணியன் கருப்பு பட்டை பிரிவில் கட்டா- குமித்தேயில் முதல் இடத்தை பிடித்தார். 2-ம் ஆண்டு இளம் பொருளியல் மாணவர் க.ஜோதி ராஜ், பச்சை பட்டை பிரிவில் கட்டா- குமித்தேயில் முதல் மற்றும் 2-ம் இடத்தை பிடித்தார்.
சாதனை படைத்த மாணவர்களை கல்லூரி முதல்வர் து.சி.மகேந்தின், செயலாளர் ஜெயக்குமார் மற்றும் சுயநிதி பிரிவில் பணியாற்றும் அனைத்து பேராசிரியர்களும் பாராட்டினர்.
Related Tags :
Next Story