சைக்கிள் மீது வேன் மோதி சிறுவன் சாவு


சைக்கிள் மீது வேன் மோதி சிறுவன் சாவு
x
தினத்தந்தி 22 March 2022 7:16 PM IST (Updated: 22 March 2022 7:16 PM IST)
t-max-icont-min-icon

சைக்கிள் மீது வேன் மோதி சிறுவன் சாவு

திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்து கருவலூர் மேற்கு வீதியை சேர்ந்த மோகன்குமார் மகன் சுதர்ஷன்  இவன் அப்பகுதியில் உள்ள கோவிலில் அர்ச்சகருக்கு உதவியாளராக இருந்து வந்தான். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கருவலூர் காளிபாளையம் பிரிவு அருகே சைக்கிளில் ரோட்டை கடந்தான். அப்போது அவினாசியிலிருந்து அன்னூர் நோக்கி அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் வந்த வேன் சைக்கிள் மீது மோதியது. இதில் சுதர்சன் தூக்கிவீசப்பட்டு பலத்த காயமடைந்தான். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவினாசி போலீசாருக்கு தகவல் தெரிவித்து உடனடியாக காயம்பட்ட சிறுவனை அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்த புகாரின்பேரில் அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story