பாலியல் பலாத்கார வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


பாலியல் பலாத்கார வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 22 March 2022 7:32 PM IST (Updated: 22 March 2022 7:32 PM IST)
t-max-icont-min-icon

பாலியல் பலாத்கார வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

லால்குடி, மார்ச்.23-
லால்குடி அருகே உள்ள கல்லக்குடி பகுதியை சேர்ந்தவர் மார்கண்டன் (வயது 36). இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இந்தநிலையில் தங்கை உறவுமுறை கொண்ட ஒரு பெண்ணை மார்கண்டன் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுபற்றி வெளியில் யாரிடமாவது தெரிவித்தால் கொலை செய்து விடுவதாக அந்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம். இது குறித்த புகாரின் பேரில் லால்குடி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து மார்கண்டனை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் உத்தரவிட்டார். இதனையடுத்து சிறையில் உள்ள மார்கண்டனிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.

Next Story