இளம்பெண் மீது தாக்குதல்: வியாபாரி கைது


இளம்பெண் மீது தாக்குதல்: வியாபாரி கைது
x
தினத்தந்தி 22 March 2022 7:35 PM IST (Updated: 22 March 2022 7:35 PM IST)
t-max-icont-min-icon

கயத்தாறு அருகே இளம்பெண்ணை தாக்கிய வியாபாரியை போலீசார் கைது செய்தனர்

கயத்தாறு:
கயத்தாறு அருகே அய்யனாரூத்து அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பெரிய துரை என்பவரின் மகன் சண்முகையா (வயது 33).  இவர் கருப்பட்டி வியாபாரம் செய்து வருகிறார்.  இவருக்கும், மனைவி பெரியதாய்க்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவரிடம் கோபித்து கொண்டு 2 குழந்தைகளுடன் பெரியதாய் அதே ஊரில் உள்ள தங்கை சந்தனமாரி வீட்டுக்கு சென்று விட்டாராம். அவரது குழந்தைகளை சந்தனமாரி பராமரித்து வருகிறாராம். மேலும் சந்தனமாரியின் கணவருடன் சேர்ந்து பெரியதாய் கருப்பட்டி வியாபாரத்துக்கு சென்று வருகிறாராம். இதனால் ஆத்திரமடைந்த சண்முகையா, சந்தனமாரி வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு சந்தனமாரி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அவரது கணவருடன் பெரியதாய் வியாபாரத்துக்கு வெளியே சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சந்தனமாரியிடம் கேட்டதில், இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சண்முகையா தாக்கியதில் சந்தனமாரி காயமடைந்தாராம். அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கயத்தாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பால் வழக்கு பதிவு செய்து சன்முகையாவை கைது செய்தார்.

Next Story