திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி


திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 22 March 2022 7:40 PM IST (Updated: 22 March 2022 7:40 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருவள்ளூரில் உள்ள கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் மனு அளிக்க வந்திருந்தனர். இந்த கூட்டத்துக்கு பள்ளிப்பட்டு வட்டம் ஈச்சம்பாடி கிராம தந்தை சிவராஜ் தெருவை சேர்ந்த அருணா என்ற பெண் தனது குழந்தைகளான தேவிகா(வயது 14), தீப பிரியா(13), சத்ய ஸ்ரீ(10), புவனா(7) ஆகியோருடன் வந்து இருந்தார்.

தீக்குளிக்க முயற்சி

அவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய் பாட்டிலை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். இதை கண்ட போலீசார் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தினர்.

தனது கணவர் இருதய அறுவை சிகிச்சை செய்து வேலைக்கு செல்ல முடியாமல் படுத்த படுக்கையாக உள்ளதால் குடும்பம் அவதிப்பட்டு வருவதாகவும், வேலை வேண்டி 40 மனுக்கள் அளித்தும் எந்த பயனும் இல்லை. இதனால் தற்கொலைக்கு முயன்றதாக அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.

பின்னர் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.


Next Story