திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள்-கார் மோதலில் டாக்டர் பலி


திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள்-கார் மோதலில் டாக்டர் பலி
x

திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் டாக்டர் பலியானார்.

விபத்து

ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டம், நாராயணபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகப்பன். இவரது மகன் சரண்யாதவ்(வயது 32). டாக்டரான இவர் ரஷியாவில் மருத்துவம் படித்தவர் ஆவார். இவர் நேற்று முன்தினம் சித்தூரில் இருந்து சென்னையை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். திருத்தணி அடுத்த ஆற்காடு குப்பம் சிவன்கோவில் அருகே வந்தபோது எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிளில் மீது நேருக்கு நேர் மோதியது.

பலி

இதில் விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சரண்யாதவ் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிகப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி சரண்யாதவ் பரிதாபமாக பலியானார். இந்த விபத்து குறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரானை நடத்தி வருகின்றனர்.


Next Story