தட்டார்மடம் போலீஸ் நிலையம் முன்பு போராட்டம்: 6 பேர் மீது வழக்கு


தட்டார்மடம் போலீஸ் நிலையம் முன்பு போராட்டம்: 6 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 22 March 2022 8:41 PM IST (Updated: 22 March 2022 8:41 PM IST)
t-max-icont-min-icon

தட்டார்மடம் போலீஸ் நிலையம் முன்பு போராட்டம் நடத்திய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது

சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே  உள்ள வடக்கு ராமசாமிபுரத்தை சேர்ந்த வெற்றிவேல்மனைவி வசந்தா (வயது 46). இவருக்கு சொந்தமான தோட்டம் செல்லும் வழியில் இருந்த இரும்பு கேட் மற்றும் முள்வேலியை அதேபகுதியை சேர்ந்த சிலர் சேதப்படுத்தியதுடன் இரும்புகேட்டை எடுத்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தட்டார்மடம் போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதையடுத்து போலீசாரை கண்டித்தும், இரும்பு  கேட்டை எடுத்து சென்றுவர்கள் மீது  வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்ககோரியும் நேற்று முன்தினம் வசந்தா, அவரதுகணவர் வெற்றிவேல், மகள்கள் பிரபாவதி, இந்துமதி, இந்திரா, உறவினர் ஜெயபாண்டி ஆகியோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜூ, பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தார்.
இந்த நிலையில் போலீஸ் நிலையம் முன்பு அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்ததாக வெற்றிவேல் உள்ளிட்ட 6 பேர்மீதுபோலீசார் வழக்குபதிவுசெய்தனர். மேலும், வசந்தா தோட்டத்தை  சேதப்படுத்தியதாக அதே ஊரை சேர்ந்த சுயம்புலிங்கம், அவரது  மகன் சுந்தர், உறவினர் விஜயராஜ் ஆகியோர் மீதும் தட்டார்மடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குரூஸ்மைக்கேல் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story