82 வயது மூதாட்டி தீக்குளித்து தற்கொலை
வடமதுரை அருகே, 82 வயது மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
வடமதுரை:
வடமதுரை அருகே உள்ள வேல்வார்கோட்டை செட்டியபட்டியை சேர்ந்தவர் தங்கத்தாய் (வயது 82). இவர், அதே பகுதியில் ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தங்கத்தாய் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் நோய் குணமாகவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த தங்கத்தாய், நேற்று முன்தினம் வீட்டில் இருந்த மண்எண்ணெயை தனது உடலில் தீ வைத்து கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு, அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து தங்கத்தாயை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
உடல் கருகி, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்ற தங்கத்தாய் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தங்கத்தாயின் உறவினர் காமாட்சிகண்ணன் கொடுத்த புகாரின் பேரில், வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story