கோத்தகிரி பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா
கோத்தகிரியில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தீ மதித்தனர்.
கோத்தகிரி
கோத்தகிரியில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தீ மதித்தனர்.
பண்ணாரி மாரியம்மன் கோவில்
கோத்தகிரி கடைவீதியில் பிரசித்தி பெற்ற, மிகவும் பழமை வாய்ந்த பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பூக்குண்டம் திருவிழா மற்றும் தேர்த்திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த 18-ந் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்று வந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
குண்டம் திருவிழா
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி காலை 7 மணிக்கு நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் பால்குடங்களை தலையில் சுமந்தவாறு, பூ குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை வழிபட்டனர்.
தொடர்ந்து குழந்தைகள் உள்பட ஏராளமான பக்தர்களும் பூ குண்டம் இறங்கினர். இதையடுத்து பகல் 12 மணிக்கு உச்ச கால பூஜை நடைபெற்றது. பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது.
தேரோட்டம்
திருவிழாவையொட்டி கோவில் தேரோட்டம் புதன்கிழமைநடைபெறுகிறது. இதையொட்டி காலை 10 மணிக்கு அபிஷேக பூஜையும், 12 மணிக்கு அலங்கார பூஜையும் நடைபெறுகிறது.
மாலை 6 மணிக்கு பக்தர்கள் திருத்தேர் வடம் பிடித்து இழுக்க, அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வீற்றிருந்து, நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
வியாழக்கிழமை அம்மன் குதிரை வாகனத்திலும், 25-ந் தேதி சிம்ம வாகனத்திலும், 26-ந் தேதி அம்மன் புலி வாகனத்திலும் வீற்றிருந்து திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story