வனப்பகுதியில் தீ பரவாமல் தடுக்க மசினகுடியில் தற்காலிக தீயணைப்பு நிலையம் திறப்பு
வனப்பகுதியில் தீ பரவாமல் தடுக்க மசினகுடியில் தற்காலிக தீயணைப்பு நிலையம் திறக்கப்பட்டது.
கூடலூர்
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிமண்டல பகுதியான மசினகுடி, சிங்காரா, சீகூர் சரக வனப்பகுதியில் கடும் வறட்சி காணப்படுகிறது. இதனால் காட்டுத் தீ பரவும் அபாயமும் உள்ளது.
தீப்பிடித்தால் உடனடியாக தீயணைப்புத்துறையினர் வாகனத்துடன் வந்து தீயை அணைப்பதற்கு நேரமாகிவிடும். இதை தடுக்க மசினகுடி வனச்சரக அலுவலகத்தில் தற்காலிகமாக தீயணைப்பு நிலையம் திறக்கப்பட்டு உள்ளது.
அங்கு தீயணைப்பு கருவிகள் மற்றும் வாகனத்துடன் தீயணைப்பு வீரர்கள் முகாமிட்டு கண்காணித்து வருகிறார்கள்.
இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, வருகிற மே மாத இறுதி வரை மசினகுடி தீயணைப்பு நிலையம் தற்காலிகமாக செயல்படும். தொடர்ந்து காட்டுத்தீ ஏற்பட்டால் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைக்கும் வகையில் தயார் நிலையில் உள்ளனர் என்றனர்.
Related Tags :
Next Story